Tuesday, February 18, 2014

டெக்னிக்கல் அனாலிசிஸ் தேவையா.... ?????

                                      “பணம் விரும்புதே உன்னை

https://www.facebook.com/groups/moneylikesu/

எங்கே தேடுவேன்
…….பணத்தை எங்கே தேடுவேன்இதுதாங்க 


இன்னைக்கு    இருக்கும் பொருளாதார சுழ்நிலையில் மத்திய 

தர வகுப்பினர் மனதில் ஓடிக்கொண்டு  இருக்கும் ஓர் ஆயிரம் கேள்வி. 

குழந்தைகளை நல்லா படிக்கவைக்கணும்,நல்ல வேலை வாய்ப்பை 


ஏற்படுத்திதரணும்,ஒரு நல்ல வாழ்க்கைதுணையினை 

அமைத்துதரணும் இதுதாங்க இந்திய....மன்னிக்கவும்....இன்றைய 

பொருளாதார சுழ்நிலையில் எல்லாருடைய 

மனதிலும்  ஆர்பாரித்து, அலங்கோலபடுத்தி வரும் பெரும் புதிர்...

பிரச்சினைனு ஒன்னு இருந்தா அதற்கு தீர்வுனு ஒன்னு 


இருக்குனுமில்ல... அதே மாதரிதான் கேள்வின்னு ஒன்னு இருந்த 

அதற்கு பதில்னு ஒன்னு இருக்கும்... 



ஷேர் மார்கெட் சூப்பரா உயர்ந்திருக்கே, சபாஷ்…!” 


அடக்கடவுளே..! இன்னைக்கு ஷேர்  மார்கெட் இவ்ளோ 

இறங்கிடுச்சே..! இதுபோன்ற டயலாக்கை பஸ், ரயில் 

பயணங்கள்அலுவலகம் போன்ற இடங்களில் நீங்கள் கேட்கிறீங்கன்னு 

வச்சுக்குவோம்....

அதை கேட்ட ஜோரோடு சிலர் சரி நாமும் எதாவது கொஞ்சம் ரிஸ்க் 

எடுத்து இந்த நம்ப பொருளாதார பிரச்னைக்கு ஒரு முடிவு 

பண்ணலாம்னு நினைக்கிறாங்க. 

அதில் ஒரு சிலர் கொஞ்சம் அரைகுறையாய் மீன் பிடிக்க 

கத்துகிட்டு "அடடா வடை போச்சேன்னு " முதலீடு தப்பிச்சுகிச்சுனு 

கரை சேர்த்துடுறாங்க ...

ஒரு சிலர் அடுத்தவங்ககிட்ட வர்த்தக குறிப்புகள்    

(Tips) வாங்கி "அடடா வடையும் போச்சு....

வலையும் போச்சேன்னு" முதலீட்டையும் இழந்து கரை 


சேர்ந்துடுறாங்க.இன்னும் ஒரு சிலரோ எதையும் 

யோசிக்காமல், எதுவும் தெரியாமல் வலை நிறைய மீனை 

அள்ளலாம்னு
 நினைச்சு வலையை வீசி ஒட்டு மொத்தமா கடலுக்குள் 


மூழ்கி காணாம போய்டுறாங்க. 


சரிவிசயத்துக்கு வருவோம்பங்கு சந்தை பற்றி எனக்கு தெரிஞ்சத 

பத்தி இங்க சொல்றேங்க........ பங்கு சந்தைகிறது மிகப்பெரிய 

கடல். அங்க இருக்கும் மீன்களை அப்படியே அள்ள ஆசைப்படாமல், நம் 

தேவைகளை முன்கூட்டியே வரையறுத்துக் கொண்டு நமது 

எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க முயல வேண்டும்.


இல்லையென்றால்,

எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் போல உதவிக்கு ஆள் 

இல்லாமல் திண்டாட வேண்டியதுதான்.. "அதுதாங்க நம்ம 

முதலீட்டுக்கு உண்டான ரிட்டர்ன்"

டெக்னிக்கல் அனாலிசிஸ் தேவையா.... ?????
 


பங்குகளை குறைவான விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று 


லாபம் பார்க்க உதவியாக இருப்பது டெக்னிக்கல் அனாலிசிஸ்   

Technical Analysis  என்கிற தொழில்நுட்ப பகுப்பாய்வுதான்.



டெக்னிக்கல் அனாலிசிஸ் எப்போது தேவை  ???

பொதுவாக, காளைச் சந்தையில் பங்குகளின் விலை ஏறிக் 


கொண்டிருக்கும்.  இதில்,எந்த நிலையில் வாங்கினாலும் சிறிது 

லாபத்தையாவது சம்பாதித்துவிட முடியும்அப்போது தொழில்நுடப 

ஆய்வின் தேவை பெரிய அளவில் இருக்காது.

அதே நேரத்தில், கரடி சந்தையில் பங்குகளின் விலை இலக்கு 


இல்லாமல் இறங்கி கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப ஆய்வு 

மிகவும் அவசியம். 


தொழில்நுட்ப ஆய்வு ஏன் தேவை  


ஒரு பங்கை எந்த விலையில் வாங்கினால் அதிக லாபம் 

கிடைக்கும்? பங்கை எப்போது விற்றால்  }Profit Book }அதிக லாபம் 

கிடைக்கும்? பங்கு முதலீட்டில் அதிக இழப்பு இல்லாமல் நஷ்டத்தை 

குறைப்பது   }Stop Loss }எப்படி? என்ற அடிப்படை ஆய்வை 

மூலமாக கொண்டதுதான் தொழில்நுட்ப ஆய்வு. இது ஒரு அறிவியல் 

அணுகுமுறை. 

தொழில்நுட்ப முறைப்படி 80 விழுக்காடு முதல் 90 விழுக்காடு சரியாக 


இருக்க வாய்ப்பு இருக்கிறது.


அப்படி பட்ட வரைபட தொழில் நுட்பத்தினை தான்  உங்களுக்கு 


தர உள்ளேன். நீங்கள்,உங்களையும், நாங்கள் தரும் வரைபட 

தொழில் நுட்பத்தினையும் நம்பி வியாபாரம் 

செய்தால் போதுமானது.


"உங்கள் கனவுகள் மெய்ப்படும் நேரமிது
"